Tuesday 16 April 2013

கூடியிருந்த இடம்





வரைபடங்கள் அழித்து

கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி

திசை தழுவி வீசும் தென்றல்  வழியெங்கும்

நிலவும் சூரியனும் ஒளிவீசித் திரியும்                                           

எல்லாக் காலத்தும்                                                       

அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும்

புவி ஆழ வேர் ஊன்றியும்

மேரு மலையென உயர்ந்தும்

வாழும் தமிழின் வழியால்

அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன்

பாத்திமா கல்லூரி

வண்ணச் சிறகுகள் பெற நாங்கள்

கூடிருந்த இடமிது

கூடியிருந்த இடமுமிதுதான்

காலச் சுவடுகள் பதிக்க  நாங்கள்

காத்திருந்த இடமிது

காதலித்துமிருந்த இடமுமிதுதான்

அனுபவ வழுக்கைக்கு முன்னே நாங்கள்

சீப்பு பெற்ற இடமிது

சீரும் சிறப்பும் பெற்றுத் தந்த இடமுமிதுதான்



கடந்து விட்ட காலங்களுக்குள் எங்களை

மறக்க விடாத மண்ணிது

மறந்தும் விடாத மண்ணுமிதுதான்

சந்தித்த சம்பவங்களுக்குள் எங்களை

சாதிக்க வைத்த கல்லூரியிது

சாதித்தும் கொண்ட கல்லூரியிதுதான்
பாத்திமா கல்லூரியை பல                                                                                                                                                                         Ms.M.Thilagabama,
                                                                                                            (Alumnae) 1988 - 1991 
இரயில்கள் கடக்கலாம்                                                                    Mathi Integrated Health Centre,

எங்கள் இரயிலை பிடிக்க                                                                 Sivakasi.
நாங்கள் காத்திருந்த நிலையமிதுதான்
காத்திருந்த நேரத்தில்
படித்திருந்தோம், பழகியிருந்தோம்
பண்படு நிலமாய் மாறியிருந்தோம்
கடலைப் பூவாய் வெளியில் பூத்து
உள்ளே காய்த்திருந்தோம்
பாடித்திரிந்தோம் ஆடியும் இருந்தோம்
மரங்களில் எங்கள் மூச்சுக் காற்றை
விட்டு விட்டே சென்றிருந்தோம்
பொங்கலிட்டோம் பூசையுமிட்டோம்
அரிதாரங்களிலும் அரிச்சந்திரனாய் இருக்க
வேண்டுதலும் வைத்தோம்
விழிப்பை வரமாய் பெற்றுச் செல்ல
உணவும் உறக்கமும் இங்கேயே
தவமாய் நிகழ்த்தினோம்
முல்லையாய் இருந்தோம்
மேரியின் நிலம் பாரியின் தேராய்
ஆனதெங்களுக்கு
தேர்வுகள் போட்டிகள்
பட்டங்கள் பதக்கங்கள்
கேள்விகள் பதில்கள்
இரவும் பகலும் எல்லாமுமான
பாத்திமா கல்லூரியே
உன் மர இலைகளில்
தினமும் துளிர்க்கின்றன
எங்கள் நினைவலைகள்
மூழ்குகின்ற  ஆளையெல்லாம்
மூணு முறை எழும்ப விட்டாய்
முத்தும் தந்து விட்டாய்
ஆகவே நீ கடலானாய்
உன் உரசல்களில்
உதயமாகின அக்கினிக் குஞ்சுகள்
தீதை எரித்து,இருளின் ஒளியாகி
உதயமாகின அக்கினிக் குஞ்சுகள்

எனவே நீ  நெருப்பானாய்
எங்கள் மிதிகளில் இறுகியிருந்தும்
எங்களை முளைக்க வைத்தாய்
ஆகவே நீ நிலமானாய்
இன்றைய வாழ்வின்
எங்கள் மூச்சுக்களில்
உனது உயிர்ச்சுவாசம்
ஆகவே காற்றானாய்
உன் மேகத் திரளில்
நனைந்திருந்தோம்
 மேலேறிப் பறந்துமிருந்தோம்
இப்பொழுது வானானாய்
பாத்திமா கல்லூரி பஞ்சபூதங்களில்
தரிப்பிடம்
இருப்பிடம்
பிறப்பிடம்
அதிக் நாங்கள் அடைந்தோம்
சக்தி , சகாயம், சமாதானம்
அதை மீண்டும் பெருக்கித் தருவோம்
நன்றியாக
சக்தி  சகாயம் சமாதானம்
      
                  - திலகபாமா.

No comments:

Post a Comment